
posted 19th February 2022
ஹெரோயினுக்காக வீடுடைக்கும் திருட்டுக் கும்பல் கைது
வீடு உடைத்து நகைகளைத் திருடி ஹெரோயின் போதைப் பொருளை வாங்கிய பிரதான சூத்திரதாரி உட்பட மூவரைத் தாம் கைது செய்துள்ளனர் என்று யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 28ஆம் திகதி யாழ்ப்பாணம் - கலட்டி - பிறவுண் வீதியிலுள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் எவருமில்லாத சந்தர்ப்பத்தை பார்த்து, வீட்டின் கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்றவர்கள் 24 பவுண் நகைகளை களவாடி சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பூசகர் முறைப்பாடு செய்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் தமது விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணைகள் அடிப்படையில் பிரதான சந்தேகநபர் யாழ். கஸ்தூரியார் வீதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகளை திருட்டுக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவர் மூலம் வங்கியில் பணிபுரியும் ஒருவரின் உதவியுடன் வேலணையில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்தனர் என்றும், இதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஹெரோயின் போதைப் பொருளை கொள்வனவு செய்தனர் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ஒரு நெக்லஸ் மற்றும் காப்பு ஒன்றும் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்கும் முயற்சியை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். திருடப்பட்ட மிகுதி நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
அத்துடன், பிரதான சூத்திரதாரிக்கு உடந்தையாக செயல்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகத்தைச் சேர்ந்த 28 வயது நபரும், நகைகளை அடகு வைக்க உதவிய வேலணையை சேர்ந்த 30 வயது நபரும் கைது செய்யப்பட்டனர்.
ஹெரோயின் பாவனையால் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள் பாவனையில் சிக்கியுள்ள இளைஞர்கள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தும்படியும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனாவால் 23 பேர் உயிரிழப்பு
இலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றால் 23 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 - 59 வயது பிரிவில் 5 ஆண்களும், 3 பெண்களுமாக 8 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 ஆண்களும் 3 பெண்களுமாக 15 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 949 ஆக உயர்வடைந்துள்ளது.
நாடுதிரும்பிய 47 இந்திய மீனவர்கள்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி ஊடுருவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் வெள்ளிக்கிழமை (19) காலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விமானம் மூலம் நேற்று சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்தத் தகவலை இலங்கைக்கான இந்தியத் தூதரகம் நேற்று காலை தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டது

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House